சிறகை விரி… பற… 1

சிறகை விரி… பற…
அத்தியாயம்:1-

சிறகொடிந்த பறவைகள்…

கூண்டுக் கிளி…

திறந்திருக்கிறது கூண்டு.
வெளி வரவில்லை கிளி.
சிறகொடிந்த பறவை அது.
பறக்க மறந்து விட்டது…


—



அவர் அந்த கதவைத் தட்டினார்… மூன்று தடவை. இடைவெளி விடாமல்.

முதலில் அவள் சிநேகா,  அந்த சத்தத்தை கேட்கவில்லை. அவள்… அவளுடைய கவலையில் மூழ்கி இருந்தாள்.

காரணம், அவளுடைய கணவன் ராம்,  கடந்த மூன்று நாட்களாக,  வீட்டிற்கே வரவில்லை. என்ன செய்வது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

சிநேகா எரியும்  அந்த அடுப்பை அணைத்தாள். அரிசி வேகும் நுரை மூடியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தது.

அதைத் துடைக்கக் கூட  அவளுக்கு நேரமில்லை. அங்கிருந்த, பிடிதுணியில்  தன் கைகளைத் துடைத்துக்கொண்டு போய்  கதவைத் திறந்தாள்.

“நான் தான். வீட்டுக்காரர்.”

தெரியும். அந்த குரல் அவளுக்குத் தெரியும். கடந்த மூன்று வருடங்களாக,  மாதம் முதல் தேதி யன்று , கேட்கும் குரல்.

“வாங்க.”

“நான் உள்ளே எல்லாம் வரவில்லை சொல்ல வேண்டிய தை இங்கிருந்தே  சொல்லிவிடுகிறேன்.” அவர் வாசல் படியின் வெளியே நின்று கொண்டு இருந்தார்.

அவர் நின்றிருந்த தோரணையே அவளுக்கு சரியில்லை என்று தோன்றியது. எதையயோ, அவளுக்கு பிடிக்காத தைச்  சொல்லப் போகிறார் என்று ஏனோ அவளுடைய மனதில் தோன்றியது.

இப்போது தான் அவள், அவளுடைய கணவன் ராம்  இல்லாமல் இவ்வளவு பெரிய வீடு, இனிமேல் தனக்குத் தேவையா என்று  மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்?

அதற்கு தன்னால், ராம் இல்லாமல், தனக்கென்று  ஒரு வேலையும் இல்லாமல், தன்னால், இனி   வாடகை கொடுத்திருக்க முடியுமா ?என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாள். 

அவளுடைய காதல் கணவன் ராம்,  கடந்த மூன்று நாட்களாக, இந்த வீட்டிற்கே வராதது அவருக்கு தெரியுமா?

அவன் வீட்டை விட்டு, அவளை,  விட்டு எங்கோ சென்று விட்டான் என்று தெரிந்தால், அதற்கு வேறு என்ன சொல்லப் போகிறாரோ ?என்று அவள்  பயந்து கொண்டே  இருந்தாள். 

அவருக்கு நூறு வயது. அவரை நினைத்தவுடனேயே வந்துவிட்டார் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அப்படி அவள் மனதில் நினைத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த வீட்டின் சொந்தக்காரர், என்ன சொல்லப் போகிறாரோ?

என்ன குண்டு வெடிக்கும் போகிறதோ ?  என்று நினைத்து அவரையே, மெளனமாக,  பரிதாபமாகப்  பார்த்தாள்.

” உனக்கு இவ்வளவு பெரிய வீடு, இனிமேல்,  தேவை இல்லை தானே?  என்று அவர் சுத்தி வளைக்காமல், நேரடியாக, உடனே தான் சொல்ல வேண்டிய  விஷயத்திற்கே வந்து விட்டார். 

மேலும், அவர் சொன்னார், ” நாளை வீட்டை காலி செய்து விடு. இந்த வீட்டை வாடகைக்கு விட, வேறு ஒருவரிடம் பேசி அட்வான்ஸ் பணம் கூட வாங்கி விட்டேன். அதைச் சொல்லத் தான் இப்போது நான் வந்தேன் “.

அதற்கு அவள், ” இல்லை அவர் வருவார். திடீரென்று என்னை காலி செய்ய சொன்னால், குழந்தை களை மற்றும் பொருட்களை எல்லாம் வைத்துக் கொண்டு, தனியாக,  எங்கே நான் செல்வேன் ?”

“உன் கணவன் மூணு நாளா வீட்டுக்கே  வரவில்லை என்பது‌ எனக்குத் தெரியும். 

அவன் வீட்டை விட்டு, உன்னை விட்டு ஓடிப் போய் விட்டான் என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார் கள்.

அதனால், வீட்டை உடனே பிரச்சினை எதுவும் செய்யாமல் காலி செய்து கொடுத்து விடு.

அதுதான் உனக்கும் நல்லது.  எனக்கும் நல்லது. அனாவசியமாக, என்னை அதிகம் பேச வைக்காதே ?”

பொதுவாக, ராம் இருந்தால் எவ்வளவு மரியாதை யாக பேசுபவர் இவர், இன்று, இவ்வாறு கண்டபடி, என்னென்னவோ வார்த்தை களை எல்லாம் பேசுகிறாரே என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அந்த வார்த்தைகள் அவளைத் தாக்கவில்லை தான்;  ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள  உண்மை … அவளைத் தாக்கியது.

அவளுக்கு அவருடன் போராடும் சக்தியும் இல்லை. அந்த எண்ணமும் இல்லை. 

இருந்தாலும், அவள், தான் பேசவேண்டிய நேரத்தில் பேசித் தானே ஆக வேண்டும் என்று நினைத்தாள்.

அதனால் அவள், ” இன்னும் எனக்கு மூன்று நாட்கள்,  கால அவகாசம் கொடுங்கள்.

அதற்குள் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து, இந்த வீட்டை காலி செய்துவிட்டு  போய் விடுகிறேன். 

எனக்கு என்று உதவி செய்ய இங்கு யாரும் இல்லை. எனவே, எனக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டும் நேரம் கொடுங்கள் இந்த வீட்டை காலி செய்ய ” என்றாள்.

மேலும், ”  இரண்டு மாத வாடகை பணத்தை, அதாவது அட்வான்ஸாக கொடுத்த பணத்தையும் , எனக்கு திருப்பி கொடுங்கள்.

என்னை உங்கள் மகளாக,  நினைத்து எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள் ” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ” அட்வான்ஸ் பணத்தை நான் உனக்கு திருப்பி தர வேண்டுமா ? எந்த  அட்வான்ஸ் பணம்?

உனக்கு விஷயமே தெரியாதா? நீ  ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாய், பெண்ணே ?

அதனால் தான் அவன், உன் கணவன்,  உன்னை நன்றாக ஏமாற்றி விட்டு எங்கோ ஓடிப் போய் விட்டான்.

கடந்த இரண்டு மாதங்களாக, உன் கணவன், இந்த வீட்டுக்கு வாடகை யே கொடுக்க வில்லை. அது உனக்குத் தெரியுமா?

நான் வாடகை பணத்தை கேட்ட திற்கு, தான் இந்த  வீட்டை காலி செய்யப் போவதாகவும், என்னை, அவன்  கொடுத்த அட்வான்ஸ் பணத்தில் இருந்து, கொடுக்க வேண்டிய வாடகை பணத்தை கழித்து கொள்ளவும் சொல்லி விட்டான்.

இதெல்லாம், முதலிலேயே உனக்குத் தெரியும் என்று தான் நினைத்திருந்தேன்.

நீ என்னை கெஞ்சி கேட்டு கொள்வதால், உனக்கு இன்னும்  இரண்டு நாட்கள் டைம் கொடுக்கிறேன்.

அதற்குள், என் வீட்டை காலி செய்து கொடுத்து விடு; இல்லை என்றால், நான் உன்னை காலி செய்ய, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். அதன் பிறகு என்னை குற்றம் சொல்லாதே. “‌என்றார் கறாராக.

அவர் சொன்ன விஷயங்களை கேட்ட அவளுக்கு அதிர்ச்சி யாக இருந்தது. தலையில் இடி இறங்கியது போல் இருந்தது.

அவளுக்கு அவளுடைய கணவன் ராம் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது.

காரணம், அவர்களுடைய திருமணம் காதல் திருமணம் தான், என்றாலும்,  அவள் அவனிடம் எதைக் கேட்டாலும், அவனுக்கு உடனே தேவையில்லாமல் கோபம் தான் வரும். 

எதையும்  அவளிடம் சொல்லவும் மாட்டான், அவள் கேட்டாலும்  கூட.

அதனால், அவள்  அவனுடைய கோபத்திற்கு பயந்து கொண்டே , அவனை எதுவும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டாள்.

தேவையில்லாமல் கேள்வி கேட்டு, அநாவசியமாக, அவளுக்கு கிடைத்த வாழ்க்கை யின் நிம்மதி யை இழக்க அவள் விரும்பவில்லை. தயாராகவும் இல்லை.

ஆனால், ராம் இதையெல்லாம், முன்கூட்டியே திட்டம் போட்டு தான் செய்திருக்கிறான் என்று நினைத்த போது, அவளுடைய மனசு  அதிகமாக வலித்தது.  அவளுக்கு உடனே என்ன செய்வது என்று கூடத் தெரியவில்லை.

அவளுக்குத் தான் ஏமாற்றப் பட்டதிற்கு, ஓவென்று வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

ஆனால் அவள் அழ விருப்ப வில்லை. அப்படி ஒரு மூன்றாவது மனிதன் முன் அழுது தன் பலவீனத்தை வெளிப் படுத்தவும் விரும்பவில்லை.

“சார்—”

“சிநேகா, நானும் மனுசன் தான். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று உனக்கேத் தெரியும்.

ஆனால் நானும்  கடன் வாங்கித் தான் இந்த வீட்டையே  கட்டி இருக்கிறேன். எனக்கும் நிறைய செலவுகள்  இருக்கிறது. மாசா , மாசம் வட்டி வேறு கட்ட வேண்டும்.

இந்த வாடகை யை தவிர எனக்கு வேறு எந்தவிதமான வருமானமும் இல்லை. அதுவும் உனக்கு நன்றாகத்  தெரியும்.

அதனால் நீ கேட்டுக் கொண்டதால், உனக்கு இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கிறேன்,
நீ வீட்டை காலி செய்ய.

அதற்குள் வீட்டை காலி செய்து விடு. “

படிக்கட்டில் அவர் இறங்கி போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காலடி சத்தம் மெல்ல மெல்லக் குறைந்தது.

சிநேகா அந்த வாசல் கதவை மெல்ல  சாத்தினாள். சாத்தியதும், அந்த கையை அந்தக் கதவின் மீது வைத்து ஒரு நொடி அப்படியே நின்றாள்.

அன்று காலை 11 மணிக்குத் தான் அவள், அவளுடைய கணவன் ராம் வேலை செய்வதாக சொன்ன அந்த ஆஃபீஸிற்கு சென்று, அங்கு அவன் இல்லாமல், அவன் எங்கு சென்றான் என்ற தகவலும் தெரியாமல், அந்த மாடிப் படிகளில் மெல்ல அவள் தனியாக, சோகமாக இறங்கி வந்து கொண்டிருந்தாள், பலவிதமான யோசனையுடன்.

அந்த ஆஃபீஸ்ஸீன்  கீழ்,  குடை மாதிரி பரந்து விரிந்து, நன்றாக வளர்ந்திருந்த அந்த தூங்குமூஞ்சி மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த பாப்பாத்தி யை  பார்த்தாள்.

அவள், சினேகாவின்  6 வயது  மகன் மித்ரனை ஒரு கையை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அவளுடைய இடுப்பில், சிநேகா வின் 4 வயது மகள் மித்ராவை தூக்கி வைத்திருந்தாள். 

அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். பாப்பாத்தி, சிநேகா மெல்ல நடந்து வருவதையே  பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை, சிநேகா வை  பார்த்து விட்டு, அவளுடைய மகன் மித்ரன்,  பாப்பாத்தி கை பிடியை பிடுங்கிக் கொண்டு ஓடி வர முயன்று கொண்டிருந்தது, இங்கிருந்தே அவளுடைய கண்களுக்குத் தெரிந்தது.  மித்ரன் ஒரு சின்ன பையன் தானே?.

அவனுக்கு அவனுடைய அம்மா அந்த படிகளில் இறங்கி வருவது தான் அவன்  கண்ணுக்கு  தெரிந்ததே தவிர, அந்த ரோட்டில் ஓடும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் அவன் கண்ணில் தெரியவில்லை. 

அப்படி தான்  ஓடி ரோட்டை கடக்கும் போது, விபத்து நடக்கும் என்றும் அவனுக்குத் தெரியாது.

அவன் பாப்பாத்தி யின் கையை பிடுங்கிக் கொண்டு ஓடி வர, இன்னும் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

நல்லவேளையாக,  பாப்பாத்தி அவனைக்  கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்ததால், அவளுடைய கை பிடியை விடவில்லை. 

திடீரென்று, மித்ரன் ஏன் இப்படி செய்கிறான் என்று அவள் திரும்பி பார்க்கத் தான், அவன் தன் தாய் சிநேகாவிடம் போகத் தான்,  அப்படி செய்கிறான் என்பது அவளுக்குப்  புரிந்தது.

உடனே அவள், ” கண்ணு… அம்மா இங்க தான் வருவாங்க… ரோட்டில் நிறைய வண்டிகள்  போகிறது பார்த்தியா… ?  அதனால் நீ அங்கு ஓடிப் போக வேண்டாம்… உனக்கு  அடிபட்டு விடும் சரியா? ” என்று சொல்லி , அவனைச்  சமாதானம் செய்தாள்.

அதைப் பார்த்து கொண்டிருந்த சிநேகா, அவர்களை நோக்கி வேகமாக போகவில்லை. 

இப்போது தான் என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது. அவர்களை நோக்கி வேகமாக போவதா?

அல்லது சாலையில் ஓடிக் கொண்டிருக்கும், அந்த  பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் எதிலாவது ஒன்றில் போய் விழுந்து தன் உயிரைவிட்டு, தன் துன்பத்தை முடித்துக் கொள்ளலாமா என்று ஏனோ ஒரு கேள்வி எழுந்தது அவளுடைய மனதில்.

தன் காதலன் ராமை நம்பித் தான் வந்து, அவனுடைய தாலியை சுமந்தாள்.

அதன் பின்னர், அவனுடைய வாரிசுகளையும் தன் வயிற்றில் சுமந்து, அவனுக்காகவே கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து  வந்தாள் .

அவளை,  அவன் நம்பிக்கை துரோகம் செய்து, அவளை நட்டாற்றில் விட்டு விட்டதை போல ஒரு துரோகத்தை அவள்  செய்ய விரும்பவில்லை தான்.

ஆனால், அவள் மனம் முழுவதும் ராமின் துரோகமும், வீட்டு உரிமையாளரின் வார்த்தைகளும், மற்றும் வாழ, இனி தான் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியும், விஸ்வரூபம் எடுத்து நின்றது.

“இந்த உலகத்தில் எனக்கு இடமே இல்லை. என் பிள்ளைகளுக்கும் நான் ஒரு சுமை தான். நான் செத்துப் போனா தான் எல்லோருக்கும் நிம்மதி…”

என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி, அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

சுற்றி நடப்பதை எதையும் கவனிக்காமல், விரக்தியின் உச்சத்தில், அவள் திடீரென்று நடுரோட்டை நோக்கிப் பாய்ந்தாள்.

அந்த நேரத்தில், அந்தச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார், திடீரென்று தன் முன் தோன்றிய சிநேகாவைப் பார்த்து, டிரைவர் பதறிப் போய் பிரேக் போட்டார்.

“கீர்…ர்ர்ர்…!”

டயர்கள் தார் சாலையில் உரசி பயங்கரமான சத்தம் எழுப்பியது. ஆனால், அந்த வேகத்தை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.

“டமார்…!”

ஒரு பயங்கரமான சத்தத்துடன் அந்தக் கார் சிநேகாவின் மீது மோதி, நின்றது.

அந்த அதிர்ச்சியில், சிநேகா தூக்கி வீசப்பட்டு, சாலையின் நடுவே, காரின்  முன் விழுந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. அவளிடம் அசைவு எதுவும் இல்லை.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top