ருத்ரனின் பனித்தீ 💖அத்தியாயம் 13

அத்தியாயம் 13

மறுநாள் காலை 

அனைவரும் தாம் தம் வகுப்பிற்கு சென்றிருக்க, நேற்று போல் இல்லாமல் இன்று பனியின் கால் வலி சற்றே குறைந்து தாங்கல் எதுமின்றி ஓரளவிற்கு நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

 சுமித்ரா பனியிடம் வந்து “ஏய் பனி ஏண்டி இங்க உக்காந்துட்ட…? அங்க வாடி நீ இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிக்குதுடி…” 

நேற்றைய தினம் ருத்ரன் கூறியிருந்ததால் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவளை பின்னிருகைக்கு வருமாறு அழைத்தாள்.

“மூடிட்டு போயிடு… நேத்து நான் ரெக்கார்ட் நோட் எழுதுனதை பார்த்து சார் என் பக்கத்துல வந்து நிக்கிற வரைக்கும் நீ என்ன கண்ணுல மிளகாய்ப் பொடிய தடவி தேய்ச்சுட்டு இருந்தியா…? அவர் பார்த்த உடனே எனக்கு சிக்னல் குடுத்துருக்கணுமா இல்லையா…! அப்போ நீ எனக்கு ஃப்ரண்டா இருந்தத தவிர அந்த சிடு மூஞ்சி சாருக்கு தான் ஸ்டூடண்ட்டா இருந்திருக்கு… 

இனிமே நீ அப்படியே இருந்துக்கோ… இது தான் எனக்கும் சரியா வரும்… உன் கூட சேர்ந்தா நான் கெட்டு போயிடுவேன்…” என்று கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் கூறினாள் பனி. 

“அம்மா தாயே…! நீ இங்கே இரு நாயே…! நான் என் இடத்துலையே உட்கார்ந்துக்கிறேன்… இன்னொரு தடவை சுமி அங்க வாடி இங்க வாடின்னு கூப்டுவல்ல அப்போ பார்த்துக்கிறேன் உன்னை…!!” 

 கோபமாக கூறிய சுமித்ரா அங்கிருந்து தன்னுடைய இடத்திற்கு சென்றாள்.

போகும் அவளை திரும்பிப் பார்த்து “சும்மா…!” என்று கண்களையும் உதட்டையும் குவித்து கூறினாள் பனி.

அவளை முறைத்து பார்த்து காலில் கிடந்த செருப்பை கழட்டினாள் சுமி. ரைட்டு விடு…! என்பது போல் மூக்கை சுருக்கி காட்டி திரும்பி அமர்ந்து கொண்டாள் பனி.  

 அடுத்த சில நிமிடங்களில் வகுப்பிற்கான பெல் அடித்தது. அதுவரையிலும் அவன் எப்பொழுது வருவான்…! என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்திருந்தாள் பனி. 

 அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காது அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய பிரத்தியோக நடையோடு அங்கு வந்து சேர்ந்திருந்தான் ருத்ரன்.

எப்பொழுதும் அவனை எரிச்சலும் கடுகடுப்பும் கலந்த கண்களால் பார்க்கும் பனியின் விழிகள் இன்று என்றும் இல்லா புதுவிதமான வேறு ஒரு பார்வையில் ரசித்தது.

வகுப்பிற்குள் நுழைந்த ருத்ரன் அனைவருக்கும் காலை வணக்கம் தெரிவித்து வருகை பதிவேட்டை எடுத்து அன்றைய நாளுக்கான வருகையை பதிவு செய்தவன், பனியின் எண் வரும்பொழுது அவளின் விழி என்கின்ற பெயரை மெல்ல வருடி கொடுத்து அவளின் ரோல் நம்பரை உச்சரித்தான். 

அதன் பின்னான நேரங்களில் அன்றைய பொழுதிற்கான பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

 முதல் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்து அவன் பாடம் எடுப்பதை கவனிக்கிறேன் என்கின்ற பெயரில், கன்னத்தில் கை தாங்கி அவனையும் அவனது நேர்த்தியான ஒவ்வொரு அசைவுகளையும் கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள் பனிவிழி. 

 முதலில் அவளின் கவனம் பாடத்தில் இருக்கின்றனவோ என்று எண்ணிய ருத்ரன், அதன் பின்னான நேரத்தில் அவளின் பார்வையும் கவனமும் பாடத்தில் இல்லாது இருப்பதை சரியாக கவனித்து அவளை உறுத்து விழித்தவாரே அவளின் அருகில் வந்தான்.

அவனின் பார்வையில் தெரிந்த மிரட்டலை கவனிக்காது அவன் தனக்கருகில் வர வர பனியின் உள்ளுக்குள் ஏதேதோ செய்தது. 

பனியின் அருகில் வந்த ருத்ரன் “ஸ்டாண்ட் அப்..” என்றான்.

எதற்கு எழுந்து நிற்க கூறுகிறான் இன்று ஒன்றும் புரியாமல் அவனின் விழிகளை பார்த்தவாறு பொறுமையாக எழுந்து நின்றாள் பனி. 

“கால்ல இன்னும் வலி இருக்குதா…?” இத்தனை நேரம் பாடம் நடத்தும் பொழுது இருந்த இறுக்கம் தளர்ந்து மென்மையான குரலில் கேட்டான் ருத்ரன்.

அவனின் இந்த மென்மையான அக்கறையான கேள்வியில் உள்ளுக்குள் மொத்தமாய் உருகி போனது பெண்மை. 

“உன்னை தான் கால் வலிக்குதான்னு கேட்டேன்…” 

தனக்கு மிக அருகில் இருந்த அவனின் முகத்தை அங்குலம் அங்குலமாக ரசித்தவாரே, இல்லை…! என்பது போல் இடவளம் தலையசைத்தாள். 

“அப்பறம் என்ன… கவனம் பாடத்துல இல்லாம இருக்கு…? என்னோட பனிஷ்மெண்ட் எல்லாம் எப்படி இருக்கும்னு மறந்து போச்சா…? ஏற்கனவே நீ பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு ஹெவியா ஒரு பனிஷ்மெண்ட் குடுக்கணும் அதையும் இதையும் சேர்த்து வச்சு டபுள் மடங்கா ஏத்திக்காம கவனத்தை பாடத்துல வைக்கப்பாரு…” 

 சரி…! என்பது போல் அதற்கும் தலையை மட்டுமே அசைத்தாளே தவிர அவளின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. 

 அவளின் லொடலொடா வாய் இன்று இத்தனை அமைதியாக இருப்பது ருத்ரனுக்கு சிறு சந்தேகத்தையும், அவள் மீதான கூடுதல் எண்ணத்தையும் உண்டாக்கி இருந்தது. 

 அடுத்த சில நிமிடங்களிலேயே ருத்ரனின் வகுப்பு முடிந்து விட, அவன் வகுப்பிலிருந்து வெளியேறும் தருவாயில், “விழி உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்… நீ பொறுமையா நடந்து என்னோட கேபினுக்கு வந்துரு…” என்றான். 

“ஓகே… ஓகே சார்…” என்றவள் வேகமாக எழுந்து இரண்டடி வைப்பதற்குள், அவளின் காலில் வலி இருப்பதை அவளின் உடல் அவளுக்கு உணர்த்தவே “ஆ…. அம்மா…” என்று ஒரு நொடி தனது நடையை நிறுத்தினாள்.

 அதனை கவனித்த ருத்ரனோ அவளின் அருகில் வந்து, “ஏய் என்ன ஆச்சு..? பார்த்து வரமாட்டியா…? நான் தான் சொன்னேன்ல பொறுமையா வான்னு..” அவளை அக்கறையாக கடிந்து கொண்டான். 

“ஒன்னுல்ல சார்.. ஒன்னுல்ல… சின்ன வலி தான் அதுவும் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்… நீ…நீங்க போங்க சார், நான் கொஞ்ச நேரத்துல கேபினுக்கு வந்துட்றேன்…” என்று பனி கூறவும் தான் அவ்விடமிருந்து கிளம்பி இருந்தான் ருத்ரன். 

 அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் ருத்ரனின் கேபினுக்கு வந்து சேர்ந்திருந்தாள் பனி. 

“சார் வர சொல்லி இருந்தீங்க… ஏதாவது முக்கியமான விஷயமா சார்..?” அவன் வரக்கூறியதன் காரணம் புரியாமல் கேட்டாள் அவள். 

 அதற்கு அவன் பதிலேதும் கூறாமல் டேபிளில் இருந்த ஒரு நோட்டை எடுத்து அவள் முன்பு காட்டினான். 

அதனைப் பார்த்து பயத்தில் விழிகளை அகல விரித்தாள் பனி. 

“நீ என்ன சின்ன குழந்தையா… ரெக்கார்ட் நோட்டு வைக்கிற இடத்துல இதை வச்சுருக்க…? என்ன கன்றாவி இது…? என்னென்னத்தையோ கிறுக்கி வச்சிருக்க…. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிற குழந்தை கூட தன்னோட நோட்டை அவ்வளவு பெர்ஃபெக்டா வச்சிருக்கும். ஆனா நீ ஒரு வளர்ந்த எருமை மாடு… நோட்டை என்ன லட்சணத்துல வச்சுருக்க…? அதுவும் என்னை பத்தி நீ இதுல என்ன என்ன எழுதி வச்சிருக்க…!” 

அவன் பேசியதில் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாது தலை தாழ்ந்தவாரே நின்றிருந்தாள் பனி. 

“சிடுமூஞ்சி, உம்முனா மூஞ்சி, வளர்ந்த மாடு, நெட்டை மரம், போஸ்ட் கம்பம், கேபிள் டவர்… இன்னும் என்னென்னமோ எழுதிருக்க …!”

“சா..ரீ… சார்… நான் ஆரம்பத்துல உங்கள பாத்ததுல இருந்தே நம்ம ரெண்டு பேருக்கும் டிஷ்யூம் டிஷ்யூமாவே போயிட்டு இருந்தது… நீங்களும் என்னை பாக்குற இடத்துல எல்லாம் திட்டுனீங்க… அதனால தான் ஏதோ ஒரு ஆத்தரத்துல அப்படி எழுதிட்டேன் சார்…” 

“ஓஹோ… மேடம நாங்க வாண்ட்டடா வேற திட்றோமோ… நீங்க என்னென்ன அறுந்த வாலுத்தனம் பண்றீங்கன்னு உங்களுக்கு மறந்து போச்சோ…?”

மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்து கேட்டான் ருத்ரன்.

 “சாரி… சார்…”

“நான் அதை கூட மன்னிச்சிடுவேன்… ஆனா என்னது இது… உன்னோட டிராயிங் ஸ்கில்ல காட்டுறதுக்கு நான்தான் கிடைச்சேனா… இவ்ளோ கன்றாவியான ஒரு ட்ராயிங்கை இதுநாள் வரைக்கும் நான் பார்த்ததே இல்லை… அப்படி ஒரு ட்ராயிங்கை வரைஞ்சு அதுல என் பேரை எழுதி வச்சிருக்க… அந்த அளவுக்கு உனக்கு என் மேல ஆத்திரமோ…?” 

“சாரி சார்… இனிமே உங்களை நல்லா அழகாவே வரையிறேன் சார்…”

“… ம்… ரொம்ப முக்கியம்… காலேஜ் செகண்ட் இயர் படிச்சுட்டு இந்த மாதிரி சின்ன புள்ள தனமா இருக்கிறதுல பெருமையா இருக்கா உனக்கு…? இனிமே இந்த நோட் என் கண்ணுல படக்கூடாது… அப்பறம் ரெக்கார்ட் நோட் எங்க…?” 

“சார் நான் தான் தெரியாம அந்த நோட்டுக்கு பதிலா இதை வச்சுட்டேன்… நீங்க ரெண்டு நிமிஷம் மட்டும் டைம் குடுங்க, நான் போய் உடனே அந்த நோட்டை எடுத்துட்டு வந்துட்றேன் சார்…” 

“நீ ஒன்னும் உடனே போயி எடுத்துட்டு வர வேணாம்… நெக்ஸ்ட் யூனிட்டும் சேர்த்து எழுதிட்டு சப்மிட் பண்ணிடு…”

“ஓகே சார்… தேங்க்யூ சோ மச் சார்…” என்றவள் அந்த நோட்டை எடுத்துக்கொண்டு கேபினிலிருந்து வெளியில் செல்ல போக அவளை அழைத்து நிறுத்தினான் ருத்ரன்.

 திரும்பி நின்ற பனி அவனின் முகத்தை கேள்வியாக பார்க்க, அவனின் விழிகளோ அவளுடைய பாதத்தில் பதிந்திருந்தது.

“இப்போ பெயின் ஓகே தான..? ஆயின்மெண்ட் கரெக்ட்டா அப்ளை பண்றியா..?” என்று இத்தனை நேரம் இருந்த கண்டிப்பான குணம் மாறி இப்பொழுது அவள் மீதான அக்கறையில் கேட்டான் ருத்ரன்.

“ஆமா சார்… இப்போ பரவால்ல நேத்து சாயந்தரம் வீட்டுக்கு போனதும் அம்மா ரெண்டு விளக்குமாத்து அடியோடு சேர்த்து கொஞ்சம் ஒத்தடமும் குடுத்ததால இப்போ கொஞ்சம் பரவாயில்லை சார்…” என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினாள் பனி. 

 அதனைக் கேட்டு பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், முதன்முறையாக ரித்துவை தாண்டி வேறோருவரின் முன் வாய் திறந்து சத்தமிட்டு சிரித்திருந்தான் ருத்ரன்.

 சிரிக்கும் பொழுது இறுகிய முகம் மாறி அவனின் அழகு முகம் இன்னும் இன்னும் அழகாக பிரதிபலிக்க ரசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றிய அவளின் எண்ணத்தை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் பனி.

“நீ எப்பவுமே இப்படித்தானா… உன் வயசுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் கூட பொறுப்பாவே நடந்துக்க மாட்டியா…?”

 பொங்கி வந்த சிரிப்பிற்கு எவ்வித தடையும் விதிக்காமல் சிரித்ததன் விளைவாக கண்களில் ஓரம் தேங்கி இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அவளைப் பார்த்து கேட்டான் ருத்ரன்.

“என்ன சார் பண்றது… மேனுஃபாக்சரிங் டிஃபெக்ட் போல…” 

“இதோ பாரு… நீ இதே மாதிரியே வாலுத்தனம் பண்ணிட்டு இருக்காத… எல்லா நேரமும் நான் அமைதியா பேசிட்டு இருக்க மாட்டேன்… எந்த அளவுக்கு என்கிட்ட மாட்டாம வாலுத்தனம் பண்றியோ அதுவரைக்கும் உனக்கு நல்லது.

ஆனா அதே சமயம் எனக்கு நீ படிப்புலையும் கவனமா இருக்கணும்… இன்னொரு தடவை இது மாதிரி ஏதாவது சேஷ்ட்டை பண்ணிக்கிட்டு என் முன்னாடி வந்து நின்ன… அப்பறம் நான் இப்படி பேசிட்டு மட்டும் இருக்க மாட்டேன்… அப்போ என்னோட பனிஷ்மெண்ட் வேற விதமா இருக்கும்… ஜாக்கிரதை…!” 

“சரிங்க சார் இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்குறேன் சார்…” என்று அவனிடம் கூறியவள் மெல்ல நடந்து அங்கிருந்து சென்று இருந்தாள்.

 போகும் அவளை பார்த்துக்கொண்டே, அவள் கூறிய விஷயத்தை நினைத்து சிரித்துக் கொண்டே தன்னுடைய இடத்தில் சென்றமர்ந்தான் ருத்ரன். 

மாணவர்களிடம் கண்டிப்பும், இறுகிய அகமும் முகமும் கொண்ட வாத்தியார் இப்பொழுதெல்லாம் அவளின் இந்த வாலுத்தனத்தை பார்த்தும், அவளுக்கு தண்டனை என்று எதுவும் குடுக்காமல்… அவளின் செயலை ரசிக்க துவங்கியதன் காரணம் என்னவென்று ருத்ரன் அறிவானா..? 

(பனித்தீ தொடரும் 💝💝💝)

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top