என் ஆயுள் நீயே 48

என் ஆயுள் நீயே 48

கடற்கரை பாறையில் அமர்ந்திருந்தனர் நனியிதழ் மற்றும் பிரணவ்.

அவர்கள் காதல் திருமணத்தில் இணைய இருக்கிறது. இந்நேரத்தில் மனதில் பழைய தவிப்புகளின் தாக்கம் கொஞ்சமும் இருக்கக் கூடாதென, இருவரின் பக்க காரணங்களை அக்கணம் பகிர்ந்துக்கொண்டனர்.

கல்லூரி இறுதிநாள். முன் தினம் தான் தேர்வுகள் யாவும் முடிந்திருக்க, இன்று ஒட்டு மொத்த அனைத்து துறை மாணவர்களுக்கும் பிரிவு விடைபெறும் விழா நடைபெற்றது.

“என்னடா இன்னைக்காவது சொல்லப்போறியா இல்லையா?” பிரணவ்வின் நண்பன் கேட்டிட… “சொல்லணும் மச்சி. இதை விட்டா வேறெப்பவும் சொல்ல முடியாது. அவளா வந்து சொல்லுவான்னு வெயிட் பண்ணி தப்புப் பண்ணிட்டேன்” என்ற பிரணவ் அப்போதே நனியிதழைத் தேடி அவள் துறை பக்கம் சென்றான்.

கல்லூரி முழுக்க ஆங்காங்கே குழுக்களாக நின்றிருந்த மாணவர்கள் அனைவரிடத்திலும் கலவையான உணர்வுகள். அனைவரும் ஒருநாள் எதிர்கொள்ளும் நாள் தானே இது. பிரணவ் மென் புன்னகையோடு அனைத்து இடங்களையும் பார்வையிட்டவாறு வந்தான்.

சற்று தொலைவிலேயே பிரணவ் நனியிதழை கண்டுகொண்டான். அவள் வகுப்புத் தோழன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

பிரணவ் அருகில் செல்வதற்கு சில அடிகள் இருக்க, யாரோ அழைத்தார்களென்று திரும்பிய பிரணவ் மீண்டும் நனியிதழை நோக்கி திரும்பி அடி வைத்திட, அவளோ தன் பையிலிருந்து மூன்ற காம்பு நீண்ட ரோஜாக்களை எடுத்து தான் பேசிக்கொண்டிருந்த பையனிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

அவனும் முகம் கொள்ளா புன்னகையோடு பூக்களை வாங்கி, அவளை தோளோடு அணைத்திட…

தொண்டைக் குழி ஏறியிறங்க, சட்டென்று கண்கள் கலங்கிப் போனது பிரணவ்வுக்கு.

முதல்முறை கலங்கி நிற்கின்றான். தன் காதலின் ஆழத்தை விழிகள் நிரம்பிவிட்ட கண்ணீரில் கண்டு கொண்டவன், மூச்சடைக்க அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.

“அவள் பார்வை பேச்செல்லாம் என்னை அவளும் விரும்புறான்னு தானே சொல்லுச்சு. இப்போ வேற ஒருத்தனுக்கு பூ கொடுத்திட்டு நிக்கிறாள்!” வாய்விட்டு புலம்பியவனுக்கு மனதில் சட்டென்று ஒரு அழுத்தம்.

“பிரணவ் தானே அது?” தூரம் சென்றுவிட்ட பிரணவ்வின் பின்புறம் வைத்து, நனிக்கு முன்னால் நின்றிருந்தவன் கேட்டான். அவன் ஷ்ரவன்.

“இங்க வரலையே!” என்றாள் நனியிதழ்.

“இன்னைக்காவது சொல்லிடு நனி.” ஷ்ரவன் சொல்லிட, “எப்படி சொல்றது தெரியலடா. படபடப்பா வருது” என்றாள் நனியதழ்.

“மூணு வருஷமா இதையே சொல்லு” என்றவன், “பேசாம நான் சொல்லிடுறேன் என்றான்.

“வேணாம்… வேணாம்… நானே சொல்றேன். பர்ஸ்ட் நீ சொல்ற வழியைப் பாரு” என்று அவனுக்கு “ஆல் தி பெஸ்ட்” சொல்லி நண்பனை அனுப்பி வைத்தவள், அவனின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு பிரணவ்வைத் தேடிச் சென்றாள்.

ஷ்ரவன் நனியின் வகுப்பு. நெருங்கிய நண்பனும் கூட. ரீமாவுக்கு அந்தளவிற்கு அவன் ஒட்டுதல் கிடையாது. அவனும் ஒரு பெண்ணை விரும்புகிறான். முதலில் அந்தப்பெண் காதலிப்பதாக வந்து சொல்லியிருக்க, அப்போது இவன் மறுத்துவிட்டான். அவளும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுக்கம் இவனுக்கு அவள் மீது காதலை வரவழைத்திருக்க, அவளாக சொன்னபோது மறுத்து, இப்போது தானாக சொன்னால் அவளும் மறுத்து விடுவாளோ என்று அஞ்சியே வருடத்தை ஓட்டியிருந்தான். இனி பார்த்துக்கொள்வதே அரிதாகிவிடும் என்பதால் சொல்லியாக வேண்டிய கட்டாயம். அதுவும் நனியிதழ் வற்புறுத்திடவே, சொல்ல முயன்று செல்கின்றான்.

அவன் எப்படி சொல்வதென்று தெரியாது கேட்க, தான் பிரணவ்விடம் காதலை சொல்வதற்காக வாங்கி வந்திருந்த பூக்களை நண்பனிடம் கொடுத்து, “நீ சொல்லணும் அவசியமில்லை. இதை முன்னாடி நீட்டு. உன் மேல லவ் இருக்க அவளுக்கு சொல்லாமலே புரியும்” என்றிட, அவனும் பூக்களை வாங்கிக் கொண்டு, அவளை தோளோடு அணைத்து விடுத்திருந்தான்.

நனியிதழ் கல்லூரி முழுக்கத் தேடியும் பிரணவ் எங்குமில்லை.

“எங்கப் போயிருப்பான்?” என்று மைதானத்தின் நடுவில் நின்று அவள் சுற்றி பார்வையை சுழலவிட, ஆண்கள் விடுதி பக்கமிருந்து பிரணவ் வந்து கொண்டிருந்தான்.

நனியிதழ் அழைத்தும் அவனுக்கு கேட்கவில்லை.

“நிக்கிறானா பாரு” என்று அவன் சென்ற திசையில் நனியிதழ் ஓட, பிரணவ் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்னடா அவ்ளோ வேகமா போன… சொல்லிட்டியா?”

“சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்ற பிரணவ், “காதல் எல்லாம் சுத்த ஹம்பக் டா” என்று ஆரம்பிக்க, அவர்களுக்கு பின்னாலிருந்த மரத்திற்கு அருகில் அப்போது தான் நனியிதழ் வந்திருந்தாள்.

பிரணவ் அவ்வாறு சொல்லியதும், மின்சாரம் தாக்கிய அதிர்வில், மரத்தின் பின் சாய்ந்து உறைந்து போனாள்.

“என்னாச்சுடா?”

“பெருசா ஒண்ணுமில்லை. லவ் அப்படின்னா வெறுப்பா வருதுடா. பொண்ணுங்க பசங்களை ஏமாத்துறதுக்கு யூஸ் பன்ற ட்ரிக் தான் லவ்” என்று பிரணவ் ஆத்திரத்தில், தனக்கு முன்னிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.

அவன் சொல்லிய வார்த்தைகளின் கணம் தாங்காது, அங்கிருந்து அழுது கொண்டே ஓடி வந்திருந்தாள் நனியிதழ்.

“பிரணவ்… இது நீயில்லை. என்னன்னு சொல்லு” என்று அவன் நண்பன் கேட்க, பிரணவ்விடம் அமைதி.

“லவ் சொல்லத்தானே போன… இப்போ வந்து இப்படி சொல்ற?” என்றான்.

“அவ பேச்சு, பார்வை எல்லாம் என்னை அவளுக்கும் பிடிச்சிருக்குன்னு தான் ஃபீல் பண்ண வச்சது” என்று நிறுத்திய பிரணவ், “அவளுக்கு வேற ஒருத்தனை பிடிச்சிருக்கு” என்று மீண்டும் மீண்டும் சுவற்றில் ஓங்கி குத்தினான்.

பிரணவ்வை கட்டுப்படுத்தி அமைதிப்படுத்துவதற்குள் அவன் நண்பன் திண்டாடிப் போயிருந்தான்.

“சரி விடு மச்சான். மூவ் ஆன் பண்ணப் பாரு.” அவன் சொல்ல பிரணவ்விடம் விரக்திப் புன்னகை.

‘கடக்க முடியுமா அவளை.’ நெஞ்சோரம் கையை வைத்து அழுத்திக் கொண்டான்.

தன்னுடன் வருவதாக இருந்த ரீமாவையும் மறந்தவனாக அப்போதே கிளம்பியிருந்தான். அது முதல் கல்லூரி நிகழ்வுகளையே முற்றும் முழுதாக மறக்க நினைத்து அனைத்திலிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டான் பிரணவ்.

இங்கு பிரணவ்வின் வார்த்தையில் துடித்துக் கொண்டிருந்தாள் நனியிதழ்.

“பசங்களை ஏமாற்ற பொண்ணுங்க யூஸ் பன்ற வோர்ட் தான் காதல்” என்று பிரணவ் சொல்லியதற்கு பின்னான காரணம் அறியாது, ‘இப்படியொரு எண்ணம் இருப்பவனிடம் காதலை எப்படி சொல்வது, சொன்னாலும் அவன் பார்வையில் தான் ஏமாற்றுக்காரியாகத்தானே தெரிவோம்’ என அவன் மீது கொண்ட அளவில்லா காதலின் வலியை அந்நொடி முதல் சுமக்க ஆரம்பித்திருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அவளின் அழுகை கூடியதே தவிர்த்து கொஞ்சமும் குறையவில்லை.

மனதின் பாராம் தாங்காது உதயனுக்கு அழைத்தவள், “செல்வா” என்று கதறிட, அடுத்த பத்து நிமிடங்களில் தங்கையின் முன் நின்று அவளை மடி தாங்கியிருந்தான் உதயன்.

பிரணவ்வின் எண்ணத்தை தங்கையின் மூலம் அறிந்து கொண்ட உதயனும், காதலாக சேர வாய்ப்பில்லை என்று நினைத்து இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்து, இவர்களை இணைத்திட திட்டமெல்லாம் போட்டு, ஒரு வழியாக இணைத்தும் விட்டான்.

நனியிதழ், பிரணவ் அன்றைய நாளின் முட்டாள்த்தனம் தெரிந்ததில் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு பார்த்தனர்.

அன்றைய நாளின் தாக்கம் இருவரிடமும் இன்று வெகுவாக குறைந்திருக்க, தங்களின் புரிதலற்ற செயல் சிரிப்பை வரவழைக்க, ஒருசேர சிரித்து வைத்தனர்.

“இப்போ நினைக்க காமெடியா இருக்குல. நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்” என்ற பிரணவ், “ரெண்டு பேரில் யாராவது ஒருத்தராவது எக்ஸ்ட்ரா மினிட்ஸ் நின்னு என்னன்னு கேட்டிருக்கணும்” என்றான்.

“எஸ்” என்ற நனியிதழ், “என் பார்வை, பேச்செல்லாம் புரியுது சொல்லிட்டு, நான் இன்னொரு பையனுக்கு பூ கொடுத்ததை நம்பியிருக்க நீ” என்று அவனது தோளிலே அடித்தாள்.

“நம்பியிருக்கக் கூடாதுதான்… ஆனால் அந்த நேரம் சட்டுன்னு எல்லாம் பிளாங்க் ஆகிடுச்சு. உன்னோட சிரிப்பு, அவனை நீ ஹக் பண்ணது எல்லாம் மொத்தமா மனசை பிசைஞ்சு விட்ருச்சு” என்றான்.

“ம்ம்” என்ற நனியிதழ், “இப்பவும் உன்னோட அந்த ஸ்டேட்மெண்ட் அப்படியே இருக்கா?” எனக் கேட்டாள்.

“இல்லை… உன்னோட காத்திருப்பு பார்த்து எனக்கு சர்ப்ரைசிங்கா இருக்கு. ஒரு பொண்ணு லவ்வுக்காக இவ்ளோ தூரம் போராடுறது சின்ன விஷயமில்லை. பையனான எனக்கே அம்மா கல்யாணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் சமாளிக்கிறது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு” என்றான்.

“எனக்காக மெனக்கெடல் செய்தது முழுக்க அண்ணாதான்” என்ற நனியிதழ், நெகிழ்வாய் பிரணவ்வின் தோள் சாய்ந்திருந்தாள்.

“மாம்ஸ் இல்லைன்னா இப்பவும் நம்மோட எண்ணத்தில் இருந்திருப்போம். இப்போ இப்படி ஒண்ணா உட்கார்ந்திருக்க மாட்டோம்” என்றான்.

அவர்களுக்குள் அனைத்தும் சீரான உணர்வு.

“எதுவா இருந்தாலும் பர்ஸ்ட் வெளிப்படையா பேசிடனும். உறவுக்கு ரொம்பவே முக்கியமானது” என்று நனியிதழ் சொல்ல, பிரணவ் அதனை ஆமோதித்தான்.

“போலாமா?” நன்கு இருட்டி விட்டிருந்தது.

“இன்னும் கொஞ்ச நேரம்” என்று நனியிதழ் சொல்ல, தன் மீது சாய்ந்திருந்தவளின் தோளைச் சுற்றி கரம் போட்டு, இருவருக்கும் இடையே இருந்த மில்லி மீட்டர் இடைவெளியைக் குறைத்தான் பிரணவ்.

அமைதியாக அந்நேரத்தை, மனதால் ஏற்பட்டிருந்த இருவருக்குமான நெருக்கத்தை இருவருமே அத்தனை ரசித்தனர்.

பேச நினைத்து, உடனிருக்கும் நீளத்தை அதிகரிக்க தோன்றியதை எல்லாம் பேசினர்.

“நல்லாயிருக்கு”, நனியிதழ்.

“என்னது?”

“இப்படி சாய்ந்திருக்கிறது தான்” என்ற நனியிதழ், “புடவை எடுக்கிற அன்னைக்கு நீங்களும் வருவீங்களா?” எனக் கேட்டாள்.

“அம்மா எதுவும் என்கிட்ட சொல்லலையே” என்ற பிரணவ்,

“ஷ்ரவனோடவும் பேசறது இல்லையா?” எனக் கேட்டான்.

“ம்ம்… அவனை அவாய்ட் பண்ணியிருக்க வேண்டாம். பட் அப்போ இருந்த சிட்டுவெஷன்… காலேஜ் டேஸ் ஃபுல்லா மறக்க ட்ரை பண்ணதால அவங்கிட்டவும் பேசறதை விட்டாச்சு” என்றவள், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள்.

“உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்த அடுத்த நாள் அஷ்மி என்னோட பயங்கர ஆர்க்யூ, ஒரு மாதிரி ஃப்ரஸ்டேரேட் ஆகிட்டேன். கொஞ்சம் வெளியில் போலான்னு பக்கத்திலிருந்த மாலுக்கு போனப்போ ஷ்ரவன் மீட் பண்ணேன். அவன் தான் பர்ஸ்ட் வந்து பேசினான். எடுத்ததும், நனிக்கும் உனக்கும் மேரேஜ் ஆகிடுச்சா கேட்கிறான். எனக்கு ஒன்னும் புரியலை. என்கிட்ட கூட காலேஜ் லாஸ்ட் டே அவள் பேசினது அப்படின்னு சொன்னவன், நான் விளக்கமா கேட்கிறதுக்குள்ள பேமிலியோட வந்திருக்கேன் அப்புறம் பார்ப்போம்ன்னு ஓடிட்டான். அதுக்கு அப்புறம் தான் உன்கிட்ட நேரடியா பேசிடலாம் நினைச்சு மெசேஜ் பண்ணேன். அடுத்து மாம்ஸ் கால் பண்ணாங்க” என்றான்.

“இப்படித்தான் சேரனும் இருந்திருக்குப் போல” என்று நனியிதழ் சொல்ல, “ரொம்ப நேரமாச்சு. போலாம் இதழ்” என்றான் பிரணவ்.

இருவரும் கைகள் கோர்த்தபடி வண்டி நிற்குமிடம் வரை நடந்து வந்தனர்.

பிரணவ் வீட்டிலேயே வந்து நனியை இறக்கி விட்டான்.

அவனை கண்டுவிட்டு கங்கா மற்றும் காமாட்சி வீட்டிற்குள் அழைக்க, மறுக்க முடியாது உள் சென்றவனுக்கு வீட்டின் சூழல் சரியில்லை என்பதை அங்கிருந்தவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது.

error: Content is protected !!
Scroll to Top